என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருந்து கடை அதிபர்"
திருப்பூர்:
திருப்பூர் மங்களம் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது28). இவர் கணியாம் பூண்டியில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையில் இருந்த ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பாரதிபுரம் என்ற இடத்தில் கேசவன் வந்தபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளை வழிமறித்த கும்பல் ஆயுதங்களை காட்டி பணத்தை தருமாறு மிரட்டினர். கேசவன் பணத்தை தர மறுத்தார்.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் கேசவனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்தனர். அதிர்ச்சியடைந்த கேசவன் சத்தம் போட்டார்.
இரவு நேரம் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால் பணத்தை கொள்ளையடித்த கும்பல் மின்னல் வேகத்தில் காரில் தப்பினர்.
இது குறித்து கேசவன் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருந்து கடை உரிமையாளர் பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு இந்த கொள்ளை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 45). ஆண்டிப்பட்டியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பெங்களூருவில் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி வந்த பரணிதரன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விரைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சுமார் 1 கி.மீ தூரம் ஓடி நின்றது. மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர் வீட்டுக்குள் சென்றது பதிவாகியுள்ளது. அதை வைத்தும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது புறநகர் பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆனால் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடவில்லை. இதனால் ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்